அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
Showing posts with label நீடுர் ஜமாத் அவலநிலை. Show all posts
Showing posts with label நீடுர் ஜமாத் அவலநிலை. Show all posts

Saturday, March 1, 2014

நிர்வாகத்தினர்களின் அணுகுமுறை மாற வேண்டும்!!

நமதூரில் பழையபடி மாற்றுகருத்துடையோரை , விரோதிகளாக பார்க்கும் நிலை தொடர்கின்றது. ஜமாத்து நிர்வாக தேர்தலில் போட்டியிட்டவர்களை ஊருக்கு வேண்டாதவர்களாக பார்க்கின்றனர். அவர்களது வீட்டு திருமணங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது இல்லை.சிலரிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் தான் திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்வோம் என்று சொல்வதாக தெரிகின்றது.
அதேபோல் நிர்வாகத்தில் நடைபெறும் தவறை சுட்டி காட்டினாலும் அவர்களது தேவைகளையும் புறக்கணிக்கின்றனர். அவர்களது உரிமைகளும் நிர்வாகத்திலிருந்து மறுக்கபடுகின்றது. ஏன் இப்படி செய்கின்றார்கள்? அவர்களும் நம் ஜமாத்தினர்கள் தான்! நம் சொந்தங்கள் தான்! இதுபோல் நடவடிக்கைகளால் மேலும் மேலும் அதிருப்தி தான் கூடிக்கொண்டே இருக்கும்.முன்பு இப்படி தான் தவ்ஹித் கொள்கையை பின்பற்றுகின்றார்கள், கிளை தொடங்கினார்கள், கூட்டம் போட்டார்கள் என்று ஊரை விட்டு நீக்கினார்கள். அதனால் அவர்கள் ஊரை விட்டா போய்விட்டார்கள்? இல்லையே! தனி ஜமாஅத் ஏற்படுத்த தள்ளபட்டார்கள்! தற்போது மாற்று கருத்துடையவர்களை நிர்வாகத்தினருடன் ஒத்துபோகாதவர்களை புறக்கணிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது!! இவர்களிடம் சரணாகதி  அடையவேண்டும், இல்லையேல் மிரட்டபடுவார்கள்! ஊரில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும்,இல்லையேல் புறக்கணிக்கும் வேலை நடக்கின்றது. ஜமாத்தார்களை அடக்கி ஆழ நினைக்காதீர்கள்!! ஆதிக்கம் செலுத்த நினைக்காதீர்கள்!! அடிபனியவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்!! அவர்களை புரக்கனிப்பதன்மூலம் அவர்களை ஜமாத்திலிருந்து மறைமுகமாக ஒதுக்க நினைக்காதீர்கள்!!இப்படி மிரட்டுவதன் மூலம் ஜமாத்தார்கள் நிர்வாகத்தை எதிர்க்க மாட்டார்கள் என்று இப்படி செய்கின்றார்களா? மிரட்டப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர்.பலர் வெளியில் சொல்லாமல் அவர்களிடம் மிரட்டலுக்கு பயந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்கின்றனர். இப்படி அடிபனியவைப்பது முறையா? இப்படியே போனால் இதற்கு என்னதான் தீர்வு? நிர்வாகத்தினர் விளக்கவேண்டும்! ஊரில் ஜமாத்தார்கள் அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும்.இல்லையேல் இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் தீர்வுக்கான  மாற்று வழியை ஜமாத்தார்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆகையால் நிர்வாகிகளின் அனுகுமுறை மாற வேண்டும்! அல்லாஹ்விடம் துஆ செய்வோம். மாற்றத்தை அல்லாஹ் தருவான். ஆமீன்.

Saturday, February 15, 2014

உரிமை மறுக்கப்படுகின்றது!

உரிமை மறுக்கப்படுகின்றது!
நமதூரில் இனைய தளம் நடத்தும் ஒரு சகோதரர் ,தமது குடும்பத்திற்காக திருமண சான்றிதல் ஊர் நிர்வாகத்திடம் கேட்டிருக்கின்றார். அதற்க்கு  முத்தவல்லி நிர்வாகத்தில் சிலர் கொடுக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார். காரணம் ஆறு மாதத்திற்கு முன்பு துணை இமாம் அபுபக்கரை தேடி போலீசார் நம் பள்ளிவாசலுக்கு வந்த செய்தியை இணையதளத்தில் வெளியிட்டடதாலும் தொடர்ந்து அபுபக்கரை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதால்  அவர்  கேட்ட சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள்  .சம்பவம் நடந்து ஆறு மாதம் ஆகின்றது.அப்போதே அந்த சம்பவம் பற்றி பேசாமல் தற்போது சான்றிதழ் தர மறுப்பது ,என்ன நியாயம்? அவருக்கு சான்றிதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக அணுக இருப்பதாக தெரிகின்றது. நமதூர் ஜமாத்தினரிடம் நியாயம் கேட்டு பாதிக்கப்பட்டவர் வந்த போது,அபுபக்கர் எங்கள் ஜமாத்தில் இல்லை அதனால் நிர்வாகம் அவரை விசாரிக்காது என்றவர்கள் அவரை பற்றி செய்தியை நியாயம் கிடைப்பதற்காக உள்ளதை உள்ளபடி வெளியிட்டதற்காக , ஜமாத்தில் இல்லாதவருக்காக பரிந்து கொண்டு ஜமாத்தில் உள்ளவருக்கான உரிமையை தர மறுப்பது நியாயமா?இதற்க்கு என்ன தான் தீர்வு? அவதூறு எழுதுவது தான் தவறு. உள்ளதை உள்ளபடி நியாயத்திற்காக செய்தியை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கின்றது? நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் ஜமாத்தினர் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். மதிப்பார்கள் என நம்புவோம்!!

Tuesday, August 27, 2013

நீடுர் நிர்வாகம் துணை இமாம் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?


நீடுர் என்றாலே இப்போழுது பிரச்சனைக்குரிய ஊர் என்றாகிவிட்டது. அதற்கு முழு முதற் காரணம் அந்த ஊரின் நிர்வாகமே. தவ்ஹீதை எதிர்க்கிறோம் பேர்வழி என்று ஊரில் மறைந்த அல்லது மக்கள் மறந்த பல அனாச்சாரங்களுக்கு புத்துயிர் கொடுத்து நிர்வகித்து வருகிறது இந்த நிர்வாகம். அது போல் பல ஊரிலிருந்து விரட்டபட்டு இப்பொழுது நீடுரில் ஒட்டி கொண்டிருக்கும் துணை இமாம் அபூபக்கரை எவ்வளவோ புகார் வந்தும், ஏந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரை பேணி பாதுகாத்து வருவது ஆச்சரியத்தையும், பலமான சந்தேகங்களையும் உண்டாக்குகிறது. அதனடிப்படையில் மற்றொரு புகார் சமீபத்தில் அவர் மீது சுமத்தப்பட்டது. அது நம்மூர் பல இணையதளங்களில் வந்துள்ளது, அதை அப்படியே உங்கள் பார்வைக்கு...
-----
இங்கு கை உயர்த்தி பேசுபவர் தப்லீக் ஜமாத் கஸ்துக்கு வரவில்லை தன் மகளின் வாழ்வை பாழாக்கிய அபூபக்கர்பைஜி என்ற நமது ஊர் நெய்வாசல் துணை இமாமை தேடி போலீசுடன் வந்திருக்கிறார்.
Kaja-1
நீடூர் நெய்வாசல் துணை இமாம் அபூபக்கர் .ஃபைஜி இரண்டாம் தாரமாக (இப்போது இருப்பது எத்தனையாவது தாரமோ தெரியாது) திருமணம் செய்த தாஹிரா பானு என்ற பெண்ணுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாம் பெண்குழந்தை பிறந்தது என்றோ அல்லது என்ன காரணமோ பிள்ளையை பெற்ற பிறகு பெண்ணுக்கு பைத்தியம் என்று கூறி அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்து வருகிறார்.
பதினொன்னரை பவுன் மற்றும் ஒரு லட்சம் வரதட்சனையாக பெற்ற இந்த ஆலிம்!! ஒன்றறை பவுன் தான் கொண்டு வந்தாள் என்று பொய் கூறி வருகிறாராம். வாங்கிய பணமும், நகையும், சீதனமும் திருப்பி தர மறுத்து வருகிறார்.
abubacker -1

               (நீடூர் நெய்வாசல் துணை இமாம் அபூபக்கர் ஃபைஜி புகைப்பட உதவி நீடூர்நெட்.காம்)
இவரின் ஒன்றுவிட்ட சகோதரியே காவல் நிலையத்தில் அபூபக்கர் மனைவி தாஹிராபானு மா9 பவுன் போட்டுவந்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் எழுத்து மூலமாக தந்திருக்கிறார்.
akka
மேலும் பத்து ஆலிம்களை அழைத்து வந்து நீடூர் மதரஸாவில் அபூபக்கருடன் பஞ்சாயத்து செய்திருக்கிறார். ஆனால் எந்த சமரசத்துக்கும் அவர் கட்டுப்படுவதாக இல்லை என உலமாக்கள் கூறிவிட்டார்கள். நெய்வாசல் ஊர் நிர்வாகம் அவர் வெளியூர் காரர் அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது!! என்று கை விரித்து விட்டதாம். உங்கள் நிர்வாகத்தில் தானே வேலை செய்கிறார் தயவு செய்து கேட்டு வாங்கித்தாருங்கள் எனறு கூறியும் கராராக மறுத்துவிட்டதாம் நெய்வாசல் நிர்வாகம்.
பெரம்பலுர் ஜமாத்துக்கோ, ஆலிம் பஞ்சாயத்துக்கோ அடங்காத இவரை பற்றி பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவதாக எழுதி கொடுத்திருக்கும் இந்த ஆலிம்சா வரவும் இல்லையாம் கால் செய்தாலும் எடுப்பதில்லையாம்.
aboobaker latter
பெண்ணுக்கு எதுவும் பிரச்சனை உள்ளதா என்று நாம் கேட்டோம் எந்த பிரச்சணையும் இல்லை அவர் சொல்வதுபோல் மன நோய் எதுவும் இல்லை என்கிறார் வந்திருந்த காவல்துறை அதிகாரி.
வாழ விரும்பம் இல்லை என்றால் அழகாக பேசி தீர்த்துவிடலாமே ஏன் ஒரு பள்ளிவாசலின் மதகுரு்வாக இருந்துகொண்டு இப்படி செய்கிறார் என்று வந்திருந்த காவல்துறை அதிகாரி கேட்கிறார்.
நேற்று நீண்ட நேரம் காத்திருந்தும் அபூபக்கரை போலீசாரால் சந்திக்க முடியவில்லை ஃபோனையும் அவர் எடுக்கவில்லை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நம்மை அழைத்து வேதனையுடன் முறையிட்டார். பல ஆயிரம் செலவுசெய்து கார் எடுத்து வந்திருக்கிறார் இது தொடர்பாக இரண்டு முறை நீடூருக்கு செலவு செய்து வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார். அவரின் முறையீட்டையும் காவல்துறை முறையீட்டையும் நாம் வீடியோ பதிவு செய்து வைத்திருக்கிறோம் தேவை படுமானால் வெளியிடுவோம்.
ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த ஆலிம்சா சொந்த வாழ்கையை சரிசெய்யாமல் இருப்பது அழகல்ல. கபுரு வணக்கத்தை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இவர் ஜும்ஆ பயானை கூட முறையாக பயன்படுத்தாமல் பிறரை விமர்சனம் செய்வதிலேயும் ஊர் மக்களுக்கு மத்தியில் பிரிவினை பேசி தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறார். இதனாலேயே பலர் பெரிய பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு போவதில்லை. இப்படிப்பட்டவர் இமாமாக நமது ஊரில் இருக்கத்தான் வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.
நன்றி: niduri.com

Sunday, December 9, 2012

நச்சுன்னு ஜமாத்துல் உலமாவுக்கு கொட்டு வைத்த அல்தாஃபி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் பேருதவியால் நேற்று வரதட்சணை ஒழிப்பு மாநாடு நல்ல முறையில் நீடுரிலே நடைபெற்றது. விவாதத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என பொய் பிரச்சாரம் செய்ய December 1 அன்று கூட்டிய கூட்டதிற்கு தக்க பதிலடியாய் நேற்றைய கூட்டம் இருந்தது. நமக்குள் நாமே அடித்துக்கொள்வது நல்லதா என்று சிலர் கேட்கின்றனர்? அவர்களை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி - பொய் பிரச்சாரம் செய்வது சரியா? என்றுதான். தூத்துக்குடி விவாதத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கியதோடு மட்டுமில்லாமல், யூதர்களின் கைக்கூலி என்று சொன்ன ஜமாத்துல் உலாமா சரித்திரத்தையும் எடுத்து வைத்தார் அல்தாஃபி. ஜமாத்துல் உலாமா 1985-ல் நடத்திய கூட்டத்தில் பங்கு பெற்ற மூன்று தலைவர்களை தவிர மற்ற அனைத்து தலைவர்களும் ஏகத்துவம் பற்றிதான் பேசினார்கள், பின்னர் கப்ரு வணக்கத்தை ஆதரித்து பேசிய அந்த மூன்று தலைவர்களையும் இவர்கள் மக்களை வழிக்கெடுப்பவர்கள் என்று கூறி  ஜமாத்துல் உலாமவிலிருந்து நீக்கம் செய்துள்ளனர், அத்தகைய ஜமாத்துல் உலாமாவோடு கைக்கோர்த்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடத்தபட்ட விதாண்டாவாத கூட்டம் தான் December 1 அன்று நடந்தது என்று ஆணித்தரமாக விவரித்தார் அல்தாஃபி. 

அடுத்து தற்போதைய நீடூர் நாட்டாமை துணை இமாம் அபூபக்கர் பேசிய பொறுப்பற்ற பேச்சை சுட்டி காட்டவும் தவறவில்லை, அதில் ஒரு கடையில் சர்பத் பத்து ரூபாய்க்கு விற்கின்றனர், அடுத்த கடையில் விஷத்தை இலவசமாக விற்கின்றனர், இலவசமாக கிடைகின்றது என்பதற்காக விஷத்தைதான் குடிக்க முடியுமா? அல்லது பத்து ரூபாய் என்பதற்காக சர்பத்தை குடிக்காமல் தான் இருக்க முடியுமா? அது போல் தான் இந்த தவ்ஹீத்காரர்கள், இவர்கள் விஷம் போன்றவர்கள் என்று தன்னுடைய அதிமேதாவிதனத்தை வெளிகாட்டியுள்ளார் இந்த அபூபக்கர். இதன் மூலம் ஒரு இமாம் பகிரங்கமாக வரதட்சணை ஆதரித்து பேசியது எவ்வளவு கீழ்தரமான செயல். வரதட்சணையால் நம்மூர் நீடுரிலையே எத்தனை குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது இவருக்கு தெரியாமல் போயிற்றா? அடுத்து குர்ஆனில் எழுத்து பிழை என்று தவ்ஹீத் ஜமாத் மட்டும்தான் கூறுகின்றதா? என்று கேட்டுவிட்டு ஆயிஷா (ரலி) சொன்ன ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கமாக விவரித்தார் அல்தாஃபி. இங்கே நாம் குறியது ஒரு மேலோட்டம் தான், மாநாட்டை பார்க்காதவர்கள் கண்டிப்பாக சிடீ வாங்கி பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பார்த்தால் தான் எது உண்மை என்பது உங்களுக்கு தானாகவே தெரியவரும்.


Thursday, December 6, 2012

உண்மை நிலையை அறிந்திட......

இன்ஷா அல்லாஹ் தூத்துக்குடி விவாதத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வருகிற சனிக்கிழமை நீடூரில் நடக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரதட்சணை ஒழிப்பு மாநாட்டில் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ளுமாறு mynidur.blogspot.com இணையதளம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.



Sunday, October 14, 2012

நீடூர் - நெய்வாசலில் புதிய பைலா? கருத்தை கேட்காமல் கையெழுத்து வேட்டை


நமது ஊரில் சென்ற மாதம் 23 – 09 – 2012 அன்று ஊர் கூட்டம் என்று அறிவித்தார்கள் கூட்டமும் நடந்து முடிந்தது பெரும்பான்மையான ஜமாத்தார்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை காரணம் இதற்கு முன் ஒரு முறை ஊர் கூட்டம் என்று அழைத்தார்கள் அந்த கூட்டத்தில் இடைக்கால நிர்வாகிகளை நியமனம் செய்தார்கள். அதன் பிறகு ஊர் கூட்டம் என்று அழைத்தார்கள்அந்த கூட்டத்தில் ரகசிய வாக்கு எடுப்பதற்கு எதிராக தீர்மானம் போட்டு கையெழுத்து வாங்கினார்கள். தற்போது ஊர் கூட்டம் என்று அழைத்து நமது ஊருக்கு புதிய பைலா கொண்டு வர முயற்சி செய்து இருகிறார்கள். ஜமாத்தினர் ஊர் கூட்டத்திற்கு அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டுமானால் எந்த விசயத்திற்கு ஊர் கூட்டம் நடைபெற உள்ளது என்பதை பற்றி தெரிவித்து அழைக்கவேண்டும் அப்பொழுதுதான் கூட்டத்தின் நோக்கம் கருதி அவசியம் என்று வருவார்கள். 23 – 09 – 2012 அன்று நடந்த கூட்டத்தில் ஊருக்கு புதிதாக பைலா அறிமுகம் செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு முன்னால் நிர்வாகிகள் தயார் செய்தார்கள் என்றும் சில மாற்றத்தோடு கொண்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.2009 -ல் தயார் செய்து ஏன் அப்போது நடை முறை படுத்தவில்லை. தற்போது பைலாவை கொண்டு வருவதன் நோக்கம் என்ன? ஜனநாயக முறை படி ஜமாத்தார்கள் ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு முறையை தடுப்பதற்காகவா?. இப்ப உள்ள நிர்வாகிகளுக்கு பைலாவை பற்றி தெரியவில்லைநிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தும் தயார் செய்யவில்லைஅப்படி இருக்கும் பொது யார் தயார் செய்து கொடுத்தார்கள்? இந்த கூட்டத்தில் இந்த பைலாவை படிக்கும் பொது தான் இப்ப உள்ள நிர்வாகிகளுக்கு தெரிகிறது. அதன் பிறகு கூட்டம் கலைகிறது. அப்படி இருக்கும் போது பைலா ஏற்படுத்தி விட்டதாக கையெழுத்து வாங்கினால் என்ன அர்த்தம்?.

ஊருக்கு பைலா கொண்டு வருவதாக இருந்தால் அதற்கு ஒரு கமிட்டி ஏற்படுத்த வேண்டும். ஊரின் நடைமுறைகள் நன்கு தெரிந்த பெரியவர்கள்மார்க்க அறிஞர்கள் இருக்க வேண்டும்முன்னாள் நிர்வாகிகளும்இப்ப உள்ள நிர்வாகிகளும்மாற்று கருத்து உடையவர்களும் மற்றும் ஊரில் உள்ள பெரியவர்களும் கொண்ட ஒரு குழு பைலா உண்டாகி அதை ஜமாத்தினர் பார்வைக்கு வைக்க வேண்டும்ஜமாத்தினர் திருத்தம் ஏதும் சொன்னால் அது நியாயமாக இருந்தால் திருத்தி கொள்ள வேண்டும். அப்படி ஜமாத்தினர் அனைவரும் ஏற்கும் படி செய்தால் தான் பைலாவை வக்போர்ட் அங்கிகாரம் கிடைக்கும். அப்படி இல்லாமல் தற்போது கொண்டு வரும் பைலா உள்நோக்கம் கொண்டதாக இருக்குமேயானால் அதனால் அதை நடை முறை படுத்த முடியாது. நான்கு பேர் பைலாவை எதிர்த்தால் அது நடைமுறைக்கு வராது . இவர்கள் கொண்டு வர துடிக்கும் பைலாவை ஊரில் பெரும்பான்மை நபர்கள் எதிர்க்கவே செய்கின்றனர். தற்போது அவசரப்பட்டு இந்த பைலாவை கொண்டு வர காரணம் என்ன?ஊரில் அனைவரையும் அரவணைத்து அழைத்து எல்லாருடைய ஆதரவையும் பெற்று பைலா கொண்டு வர வேண்டும். பொதுவாக ஊரின் நலன் கருதி யாரையும் பாதிக்காத வண்ணம் பைலா கொண்டு வர வேண்டும்செய்வார்களா? பொருத்து இருந்து பார்போம். மாற்று கருத்து உடைய ஜமாத்தினர் ஊரில் கூட்டம் நடைபெறும்போது அந்த கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டு அவர்களின் ஆலோசனைகளை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.   

Friday, September 14, 2012

இதுதான் நியாயமா?


நமது ஊரில் ஊரில் புதிதாக தேர்ந்தெடு
க்கபட்ட நிர்வாகத்தினரிடம் ஜமாத்தில் சேர விருப்ப மனுக்கள் சில பேர் கொடுத்து உள்ளதாக இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டோம். சேர்க்க வேண்டியது நல்லது தான், ஆனால் இதற்கு எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று ஜமாத்தினருக்கு வெளிப்படியாக தெளிவு படுத்த வேண்டும். ஏனென்றால் முன்னாள் நிர்வாகத்தில் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களை பெரும் தொகை பள்ளி கட்டுமான பணிக்கு வேண்டி நன்கொடை தர வேண்டும் என்று சொல்லி பணம் பெற்று கொண்டு சேர்த்தனர். நன்கொடை கொடுப்பவர்கள் தான் ஊரில் சேர தகுதியானவர்களா? நமது ஊரில் இருபது வருடங்களுக்கு மேலாக வெளியூரிலிருந்து குடி ஏறியவர்கள் பல பேர் இருக்கிறார்கள், அவர்கள் நன்கொடை கொடுக்க முடியாததால் இன்னும் ஊரில் சேர முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் ஊரில் புதிதாக சேர ஒரு வரைமுறை இருக்க வேண்டும். அது பணமாக இருக்க கூடாது, ஜமாத்தில் சேர பணம் ஒரு தடையாக இருக்க கூடாது. நன்கொடை இல்லாமல் ஊரில் என்ன சட்ட திட்டங்கள் பின்படுத்தபடுகிறது என்பதனை ஜமாத்தினருக்கு ஊர் நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். அதே போல் ஜாமத்தில் இருந்த சிலரை முன்னாள் நிர்வாகத்தினர் ஊர் நீக்கம் செய்தனர், தாமுமுக கிளை தொடங்கினார்கள் என்ற காரணம் சொல்லி முன்று பேர், வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடத்தியதற்கு ஒரு நபரையும் ஊர் நீக்கம் செய்தார்கள். இது ஏற்று கொள்ளும்படி உள்ளதா? ஊர் நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் இருப்பதாக சொன்னால் என்ன என்ன காரணத்திற்கு வேண்டி ஊர்
நீக்கம் செய்வீர்கள்? அதற்கு வரையறை உண்டா? முதன் முதலில் கிளை தொடங்கியவர்களுக்கும், முதன் முதலில் கூட்டம் நடத்தியவர்களுக்கும்    மட்டும் தான் பொருந்துமா? ஏன் என்றால் அதன் பிறகு பல கூட்டம்   நடை பெற்று உள்ளது. ஊர் நிர்வாகதினர்கள் சிலர் தாமுமுக கூட்டத்தில் பங்கு கொண்டு உள்ளார்கள். அதே போல் தற்போது தாமுமுக விற்கு கிளையும் உள்ளது. இன்னும் சொல்ல போனால் தற்காலிக நிர்வாகத்தில் தாமுமுகவினர் இருந்தனர். தற்போது புதியதாக தேர்வு செய்ய பட்டு உள்ள நிர்வாகத்திலும் தாமுமுகவினர் இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் முன்பு தாமுமுக ஒன்றாக இருந்த போது நீக்கம் செய்தனர் தற்போது தௌஹீத் ஜமாஅத் தாமுமுக என்று இரண்டாக உள்ளது நஜாத் காரர்களை நீக்கினோம் என்றால் நமது ஊரில் இந்த ஐந்து நபர்கள் மட்டும் தானா தௌஹீத் வாதிகள், நமது ஊரில் தௌஹீத் கொள்கையை பின்பற்ற கூடியவர்கள்  நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வரை முறை பின்பற்றபட்டது? இவர்கள் பார்வையில் ஒரு இயக்கத்தில் இருப்பது தவறு என்றால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் தமுமுக இயக்கத்திலும் ஊர் நிர்வாகதிலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை? நடு நிலை வாதிகள் சிந்தனை செய்ய வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் கூட ஒரு குறிப்பிட்ட மாதம் அல்லது வருடம் நிர்ணயம் செய்வார்கள் ஆனால் நமது ஊர் முன்னாள் நிர்வாகிகள் பார்வை படி கிளை தொடங்கியதும் மாநாடு நடத்தியது தவறு என்றால் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனையா? அல்லது வாழையடி வாழையாக தொடருமா? இதற்கு தீர்வு என்ன? புதிய நிர்வாகிகள் சிந்தனை செய்ய வேண்டும். ஊரில் பல பிரச்சனைகளுக்கு இது போல் முட்டாள் தனமான அணுகு முறை தான் காரணமாக இருந்து வருகிறது. ஊர் நீக்கம் செய்வது என்பது சட்டப்படி தவறான செயல். ஊர் நீக்கம் செய்ய பட்டவர்களை புதிய நிவாகத்தின் நிலை படு என்ன என்று தெளிவு படுத்த வேண்டும். நாங்கள் செய்ய வில்லை ஆகையால் நாங்கள் விளக்கம் அளிக்க முடியாது என்று சொல்ல முடியாது. காரணம் முன்பு இருந்த நிர்வாகம் .தவறான அணுகு முறையை கடை பிடித்தார்கள் இப்ப உள்ள நிர்வாகம் ஜமாத்தினரால் தேர்வு செய்ய பட்ட நிர்வாகம் ஆகையால் பழைய நிர்வாகத்தின் நிலைபாட்டை இந்த விசயத்தில் கடை பிடிக்க கூடாது புதிய நிர்வாகத்தின் அணுகு முறை எல்லரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் ஜமாத்தினரின் விருப்பம்
.
(பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்கு அந்த மறுமை வாழ்வை எற்படுத்தியுள்ளோம் நல்ல முடிவு இறைவனை அஞ்சுவோர்க்கே 

இப்படிக்கு ,
நமது ஊர் நலனை நாடும்
துபாய் வாழ் நீடூர்-நெய்வாசல் ஜமாத்தார்கள் 

Friday, August 17, 2012

பித்ரா விநியோகம் செய்ய பள்ளி தராத நிர்வாகம்.

அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

நீடுர் - நெய்வாசல் அசோசியேசன் - துபாய் சார்பாக நீடுர் ஜின்னா தெரு பள்ளியில் ஒரு லட்சத்துக்கு மேல் பொருமான  பித்ரா விநியோகம் செய்வதாக இருந்தது. அதனை கொடுக்கவிடாமல் ஜின்னா பள்ளியையே பூட்டிவிட சொல்லிவிட்டனர் நம் ஊர் ஜமாத் நிர்வாகிகள். நம் ஊரில் நடக்கும் அட்டூழியங்களை தட்டி கேட்டால் எதாவது விமர்சனம் செய்து ஊருக்கு 'சிங்க் சாங்க், அடிக்கும் விமர்சகர்களே இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? இந்த அசோசியேசன் என்ன தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்ததா? நல்ல காரியத்தை செய்ய விடாமல் தடுக்கும் நம் ஜமாத் நிர்வாகிகளை என்ன செய்வது? அல்லாஹ் அக்பர். பள்ளியை பூட்டியவுடன் சகோதரர் நசீர் அலி அவர்களின் வீடு முன் வைத்து பித்ரா அல்லாஹ்வின் உதவியோடு விநியோகிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

புகைப்பட தொகுப்பை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
http://niduri.com/?p=1573



Sunday, July 1, 2012

சகோதரத்துவம் பேணுவோம் சகோதரர்களே!!!!


அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் உதவியால் நல்லபடியாக நமது நீடுர் நெய்வாசல் தேர்தல் இனிதே முடிவுற்றது. இந்த தேர்தலில் நாம் எழுதிய கட்டுரைகளுக்கு பல கருத்துகளை பலரும் வெளியிட்டனர். அதில் சிலர் கடுமையாக நம்மையும், நம்முடன் சேர்த்து பலரையும் விமர்சனம் செய்தனர். அதில் அவர்களின் குற்றச்சாட்டு நாம் காசு வாங்கிகொண்டு சிலருக்காக இத்தேர்தலில் வேலை செய்ததாக கூறுயிருந்தனர். அது மட்டுமில்லாது ஊரில் அனைவரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம், வெளிநாட்டில் இருந்துகொண்டு உனக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். சகோதரர்களே அல்லாஹ்வின் மீதாணையாக யாரிடமும் காசு வங்கி கொண்டு வேலை செய்யவில்லை. சிலர் நம்மை விமர்சிப்பதிலிருந்து ஒன்று நமக்கு தெரிந்தது, ஒரு அணியையே சப்போர்ட் செய்து எழுதிகிறீர்களே! இது நியாயம் தானா? ஏன் இந்த ஓரவஞ்சனை என கருத்து கூறிவிட்டு நிர்வாகத்தினரை மறைமுகமாக புகழ்பாடினர். அதுமட்டுமில்லாது நம்மை விமர்சனம் செய்தவர்கள் எதிர்தரப்பினர் இந்த தேர்தலில் செய்த பல அடாவடிகள் ஒன்றை கூட விமர்சனம் செய்யவில்லை. மேலும் சிலர் பச்சை பொய்யையும் பரப்பி வந்தனர், அதாவது ஊரில் மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்கள் அனைவரும் தவ்ஹீத் என்றனர் இது உண்மையா? இதை கூறியவர்களை இங்கே விமர்சனம் செய்தவர்கள் விமர்சித்தார்களா என்றால் இல்லை. இவர்கள் நோக்கமெல்லாம் மாற்றம் வேண்டி எழுதிய நாமாக இருந்தாலும் சரி, மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களாயிருந்தாலும் சரி அனைவரையும் தவ்ஹீத்வாதிகள், ஊர் ஒற்றுமையை சீர் குழைப்பவர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி நம்மை ஓரம் கட்டி நிர்வாகத்தின் சார்பாக பிரச்சாரம் செய்தனர். மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களை அவனை பற்றி உனக்கு என்ன தெரியும், எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறான் தெரியுமா? உனக்கு என்ன தெரியுமென்று விமர்சித்து, எதிர்தரப்பில் போட்டியிடும் நல்லவர்களை, வல்லவர்களை விமர்சனம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. ஊரில் ஒற்றுமையை விரும்புபவர்கள் என்ற தோற்றத்தை உண்டாக்கி சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தார்கள். சகோதர்களே நாம் உங்களை விமர்சனம் செய்யவில்லை, நாம் ஏன் கருத்தால் அடித்து கொண்டிருக்க வேண்டும், நாம் விமர்சிப்பதெல்லாம் நிர்வாகத்தினரை தான். ஓர் நிர்வாகமென்றால் வெளிப்படையாக இருக்கவேண்டும். எல்லாருக்கும் கணக்குகளை காட்டவேண்டும் என அவசியமில்லை என்றும் கூறுகின்றனர். எல்லோருக்கும் காட்ட வேண்டாம் பொதுவாக மாதயிறுதியில் வரவு செலவு கணக்குகளை நிர்வாக போர்டில் வைக்க என்ன கஷ்டம். மருத்துவ கல்லூரிக்காக வாங்கிய நன்கொடை, பள்ளிக்காக செலவு செய்த விபரம் எதுவும் நிர்வாகத்தினரிடமில்லை, இருக்க போவதுமில்லை, அதை யாரும் தட்டியும் கேட்க போவதுமில்லை. வெள்ளிகிழமை ஜும்மா தொழுகையில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் கக்கூஸ் கழுவுவர்கள் என்று இந்த அம்பானி ஹஜ்ரத் சொன்னாரே அதற்கு இதெல்லாம் தப்பு என்று அவரிடம் வாதிட வேண்டாம் கனிவாகவாவது எடுத்து கூறீனார்களா இந்த விமர்சகர்கள்?

நமதூரில் சென்ற 15 வருட நிர்வாகத்தில் முரண்பட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. முன்பு ஊர் நிர்வாகிகள் தேர்வின் போது (அப்போது வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைபெறும்)தற்போதைய டிரஸ்டி எஸ்.டி.அன்சாரி அவர்களை ஜமாத்தினர் சிலர் முத்தவல்லியாக முன்னிறுத்தினர். ஆதிக்க சக்திகள் அப்போதும் தாங்கள் முன்னிறுத்தும் நபர் தான் வரவேண்டும் என்று ரயிலடித்தெரு ஜமீல் அவர்களை முன்னிறுத்தினர்.சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு தள்ளுமுல்லானதால் நிர்வாகிகள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.மறுதினம் இருத்தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டு தலா நான்கு பேரை முன்னிறுத்தினர். பிறகு தேர்வும் ஆனார்கள்.முத்தவல்லியாக அப்போது ரயிலடித்தெரு ஜமீல் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.அப்போது எஸ்.டி.அன்சாரி அவர்களை ஏற்காததிற்கு சொன்ன காரணம் அவர் மதரசாவில் செயலாளராக இருக்கின்றார், அந்த பொறுப்பை விடகூடாது, ஒருவர் ஒருபதவியில் தான் இருக்க வேண்டும் என்றனர்.ஆனால் தற்போதும் மதரசாவில் பொருளாளர் பொறுப்பில்தான் உள்ளார்கள்.தற்போதைய முத்தவல்லி கே.ஆர்.மாலிக் அவர்கள் மதரசாவில் உப தலைவராக உள்ளார்கள். முன்பு சொல்லிவந்த காரணத்திலிருந்து முரண்பட என்ன காரணம்?.இதுதான் நடுநிலையா? இதன் மூலம் தான் முன்னிறுத்தும் நபர் தான் நிர்வாகியாக வரவேண்டும்என்று தன் ஆதிக்கத்தை நிலை நாட்டி கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.இது ஊருக்கும், ஊர் ஒற்றுமைக்கும் நல்லது என்று இந்த விமர்சகர்கள் நினைக்கிறார்களா? இல்லை அவர்கள் வாய் சவடால் எல்லாம் நம்மிடம் மட்டும் தானா? இங்கே கருத்தை பக்க பக்கமாக எழுதி தன்னை தூய்மைவாதிகளாக காட்டினார்களே, இந்த அக்கீரமத்தையெல்லாம் தூய்மை படுத்த வேண்டியது தானே? இவர்கள் செய்வார்களோ இல்லையோ அல்லாஹ் கண்டிப்பாக செய்வான், இடையில்நாம் கருத்தால் அடித்து கொண்டு நமக்குள் பகைமையை வளர்க்க வேண்டாம் சகோதரர்களே. சலாம்.

Saturday, June 16, 2012

வெற்றி பெற்றவர்களின் விபரம்

வெற்றி பெற்றவர்களுக்கு இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களின் விபரம் கீழே

1.ஹண்ணான் 254

2.அப்துல்ரவூப் 247

3.அப்துல் மாலிக் 235


4.ஜெஹபர்அலி 218


5.அப்துல்மஜிது 213


6.சதகத்துல்லாஹ் 207


7.தமிமுன்அன்சாரி 203


8.பஜிலூர் ரஹ்மான் 203


9.முஹம்மதுஷபீர் 200


10.முஹம்மதுமஜிது197


11.சபீர்அஹமது 196


12.முஹம்மதுஅலி 195



மற்றவர்களின் விபரம் கீழே


13.அப்துல் மஜிது -186

14.காதர்ஷரீப் -169


15.அப்துர்ரஹ்மான் -183

16.தாஜுதீன்/யூசப் -152

17.தாஜுதீன் M.A.P. -183

18.S.A.நசுருல்லாஹ் -169

19.நஜிமுதீன் -184

20.லியாகத்அலி -192

21.முஹம்மது அமீன் -143

22.S.Mஆரிபின் -156

23.Mஅலி -154

24.AKS.நஜிம் -125

பரபரப்பாய் போகும் நீடுர் - நெய்வாசல் ஜமாத் தேர்தல்

காலை 9 மணி முதல் சலவாத் பாவா நினைவு கூடத்தில் நம்மூர் மக்கள் ஆர்வமாய் நின்று ஓட்டளித்து வருகின்றனர். DSP தலைமையில் ஐப்பதுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்ஷா அல்லாஹ் ஊரின் பழைய பெருமையை மீட்டெடுப்போம்.


அல்லாஹ்வின் பேருதவியால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் நாள் வரை எத்திவிட்டோம். இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நம் நிர்வாகத்தை முதன் முறையாக பயமின்றி தேர்ந்தேடுக்கப் போகும் நாள். இன்று அனைத்து ஜமாத்தினருக்கும் ஓர் வேண்டுகோள்!, வெளிநாட்டில் வாழும் சில சகோதரர்கள் இந்த ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஊர் வந்திருக்கிறார்கள். எனவே இந்த ரகசிய வாக்கெடுப்பில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள், யார் யாரெல்லாம் நல்லவர்கள் என்று. எனவே நம் ஊரின் மீது மட்டும் அக்கறை கொண்ட, அல்லாஹ்விற்கு பயந்து நடக்கும் அடியார்களை தேர்ந்தெடுத்து நம் ஊரின் மீது படிந்த கரையை துடைத்து ஊரின் பழைய பெருமையை மீட்டெடுக்க கேட்டுக் கொள்கிறோம்.  
 அது போக நேற்று ஜும்மாவில் வழக்கம் போல் இமாம் அவர்கள் ஊர் ஆதிக்கவாதிகள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதையே ஒப்பித்துள்ளார்கள். அதை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Thursday, June 14, 2012

ஜமாத்தார்களின் கவனத்திற்கு.....


பொய் புகார் அம்பலமானது



ரகசிய வாக்கெடுப்பிற்கு ஜமாத்தார்களின் ஆதரவோடு முயற்சிசெய்து கொண்டு இருக்கின்ற MAP.தாஜ் அவர்களின் மீது பொய்யான புகார் ஜாமியா மஸ்ஜித் நிர்வாக லெட்டர் பேடில் சிலரால் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொடுக்கபட்டது.புகார் என்னவென்றால் MAP.தாஜ் அவர்கள் அவதூறு பேசுவதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும், ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க முயல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது! நமதூர் ஜமாத்தினருக்கு ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்துவது யார்? தேர்தலை கெடுக்க நினைப்பது யார்? என்பது நன்கு தெரியும்!! MAP.தாஜ் அவர்கள் காவல்நிலையம் சென்று தற்போதைய சூழ்நிலையை உரிய ஆவணங்களோடு விளக்கி உள்ளார். ரகசிய வாக்கெடுப்பை உயர்நீதிமன்றம் சென்று   உத்தரவை பெற்றதே தாங்கள் தான் என்றும், உண்மை அப்படி இருக்க நானே தேர்தலுக்கு இடையூறாக இருப்பேனா? என்று விளக்கம் அளித்துள்ளார்!! ஊரில் நடந்த பல சம்பவங்களை அவர் சொன்னபோது புகாராக வேண்டுமானால் கொடுங்கள் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.ஆனால் MAP.தாஜ் அவர்கள் " புகார் ஒன்றும் வேண்டாம்..அமைதியாக தேர்தலை நடத்த பாதுகாப்பு செய்து தாருங்கள்"என்று கூறியுள்ளார். அவருடன் ஜமாத்தை சேர்ந்த பலரும் காவல்நிலையம் சென்றுவந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் மீது புகார் கொடுத்தவர்களில் முதல் நபர் முன்பு MAP.தாஜ் அவர்களை ஊர் பஞ்சாயத்திற்கு தூக்கிச்செல்ல வந்த ஐவரில் ஒருவர்!! ஒருவர் தற்போது நாட்டாமை தேர்தலில் போட்டியும் இடுகிறார். (இது சம்பந்தமாக முன்பே எழுதி இருந்தோம்) அப்போதே MAP.தாஜ் அவர்கள் அந்த சம்பவத்திற்கு ஒரு புகார் கொடித்திருக்கலாம், ஆனால் பொறுமை காத்தார். தற்போதும் பொறுமையுடன் தான் செயல்படுகின்றார். அவர் நினைத்திருந்தால்,இடைக்காலத்தில் தற்போது தேர்தலில் போட்டியிடும் மூன்று நபர்களை மிரட்டியதற்குகூட புகார் அளித்திருக்கலாம்.ஆனால் அதை அவர் செய்யவில்லை.சுமூகமாக போகவே அவர் விரும்பினார். அவர் ரகசிய வாக்கெடுப்பிற்கு முயன்றார் என்பதனாலேயே அவருக்கு பலவிதமான நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். முன்பும் ஒருமுறை ஊர் நிர்வாகத் தேர்தலுக்காக ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ததிற்கு காவல் துறையில் அவர்மீது புகார் அளித்தனர் முன்னால் நிர்வாகிகள்! அவர் என்ன தவறு  செய்தார்? பெரும்பான்மையான ஜமாத்தார்களின் விருப்பத்திற்கேற்ப ஜமாத் நிர்வாகிகள்  தேர்தலை,ஜமாத்தார்கள் ரகசியமான முறையில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி பலனில்லாத போது,உயர் நீதி மன்றம் சென்று ரகசிய வாக்கெடுப்பிற்கு உத்தரவை பெற்றார். ஊரில் உள்ள ஜமாத்தார்களின் வேண்டுகோளுக்கு இங்க ஜமாத்தார்களின் ஆதரவோடு தான் ரகசிய வாக்கெடுப்பிற்கான முயற்சியை செய்து வருகின்றார். எப்படியோ  உண்மை நிலவரத்தை விளக்கியதன் மூலம் நீங்கள் பொய்யர்கள் என்று காவல்துறையினருக்கு நன்கு விளங்க நீங்கள் கொடுத்த புகாரே போதுமானதாக ஆனது.பொய்யான புகாரை கொடுத்து யாரையும் தண்டிக்க நினைக்காதிர்கள்!! அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருக்கின்றான்!! அவர்கள் ரகசியவாகெடுப்பிற்கு ஏற்பாடு செய்துகொண்டு இருந்தால்..அதை ஏன் உங்களுக்கு எதிரான செயலாக பார்க்கின்றீர்கள்?இதுபோல் பொய்யான புகாரை கொடுத்து ரகசிய வாக்கெடுப்பிற்கு முயல்பவர்களை நெருக்கடிக்கு ஆலாக்கினால்..யாரும் ரகசிய வாக்கெடுப்பை கோர மாட்டார்கள் என்று எண்ணாதீர்கள்! நமதூர் ஜமாத்தினர் நியாயத்தின் பக்கம் தான் இருப்பார்கள்!! இனிமேலும் பொய்யான அவதூறுகளை பரப்பாமலும் மிரட்டாமலும் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் !!அல்லாஹ் நல்லவர்களுக்கு வெற்றியை தருவானாக.!! ஆமீன்!!

Monday, June 11, 2012

ஊர் மக்களை ஏமாற்ற நினைக்கும் முன்னால் நிர்வாகிகள்!!


தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கும் முன்னாள் நிர்வாகிகள்

நமது ஊர் நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த வக்ஃப் வாரியம் முடிவுசெய்து சென்றவாரம் அதற்கான அறிவிப்புகளை செய்தார்கள் தேர்தலுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகிறது இது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் தேர்தல் அறிவித்த பிறகும் பள்ளிவாசலில் வைத்து தங்கள் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார்கள்,(இது ஜமாத்தார்கள் கூட்டம் ஆகாது) பதவியில் இருப்பது போல் அறிக்கை விடுகிறார்கள், ஜாமிஆ மஸ்ஜித் என்று பள்ளிவாசல் பெயரைபோட்டு நோட்டீஸ் அடித்து இருக்கிறார்கள் தேர்தல் நேரத்தில் பள்ளிவாசலையோ, நிர்வாகத்தின் பெயரையோ இந்த முன்னால் நிர்வாகிகள் பயன்படுத்துவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.? எல்லாம் போக இப்போது தாங்கள் தேர்வு செய்து அறிவித்த வேட்பாளர்களை நமது ஜமாத்தார்கள் மூலம் தேர்வு செய்து அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் என்று எழுதியிருக்கிறார்கள் இது முற்றிலும் தவறான கருத்தாகும். அரசியலில் வித்தை கத்த இவர்களுக்கு ஏனோ இது தெரியவில்லை இதை அறியாமை என்பதா? ஆணவம் என்பதா?


அப்படியானால் அவர்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளவர்கள் ஏனாதிமங்களத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்தார்களா? அல்லது கடுவங்குடியில் உள்ளவர்கள் தேர்வு செய்து அறிவித்தார்களாஇதை அவர்கள் விளக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்புக்கும்தேர்தலுக்கும் பாடுபட்ட தாஜ், முஹம்மது அலி மற்றும் இவர்களை சார்ந்தவர்கள்தான் ஊர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்களே ஊர் மக்களின் ஆதரவைப்பெற்றவர்கள் 
இவர்கள் தான் முதலில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்,மேலும் தாங்கள் ஊர் பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

ஊர் முன்னால் நிர்வாகிகளின் ஆதரவில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையும் இதுவரை முன்வந்து செய்ய வில்லை இவர்களுக்கு ஓட்டு கேட்பதும் அறிக்கை விடுவதும் முன்னால் நிர்வாகிகள்தான் செய்கிறார்கள். இப்போதே இப்படி என்றால் இவர்கள் நிர்வாகத்திற்கு வந்தால் யார் நிர்வாகம் செய்வார்கள்? இதை மக்கள் புரிந்தால் சரி. மேலும் அதில் சிலர் இன்னும் 
தேர்தலை நிறுத்த என்ன செய்யலாம் என்பதில் மும்முரமாக இருப்பதால் அதற்கான நடவடிக்கையை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தி வருகிறது. தேர்தலை சந்திக்க இவர்களுக்கு ஆற்றல் இல்லாததையே இது காட்டுகிறது.

உண்மையில் முன்னால் நிர்வாகிகளின் ஆதரவு வேட்பாளர்கள் தங்கள் சுயவிருப்பத்தில நின்றால் அவர்கள் களம் இறங்கி ஓட்டு கேட்கவேண்டும் தாங்கள் பதவிக்கு வந்தால் என்ன நன்மை செய்வோம், என்ன திட்டம் கொண்டுவருவோம் என்பதை வேட்பாளர்கள் தங்கள் சொந்த கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அது அங்கு நடக்கவேயில்லை என்பதை 
நமது வாசகர்களும் ஊர் ஜமாத்தார்ளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சுயமாக செயல்படாத இந்த வேட்பாளர்கள் நாளை பதவிக்கு வந்தால் எப்படி நிர்வாகம் செய்வார்கள், திட்டம் தீட்டுவார்கள், செயல்படுவார்கள். இவர்கள் எதையும் செய்ய நினைத்தால் அண்ணன்களை கேட்காமல் செய்ய முடியாது என்பதையே இது உணர்த்துகிறது. இதை நமது ஊர் மக்கள் புரிந்து யார் பதவிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் வருகிற ஊர் நிர்வாக தேர்தலில் ஊர் ஜமாத்தார்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்று போட்டியிடும் சகோ. எம்.ஏ.பி.தாஜ், சகோ.முஹம்மது அலி மற்றும் இவர்களை சார்ந்த சகோதரர்களுக்கு வாக்களிக்குமாறும் இவர்கள் மட்டுமே ஊரில் சிறந்;த மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை ஜமாத்தார்களுக்கு அன்புடன் நினைவுபடுத்திக்கொள்கிறோம். அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

நன்றி: www.niduri.blogspot.com

Sunday, June 10, 2012

பொய் புகார் - நீடூர் ஜமாத் நிர்வாகத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி!!



ஜமாத் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் MAP.தாஜ் அவர்களின் மேல் முன்னாள் நிர்வாகிகளால் பொய் புகார் கொடுக்க பட்டுள்ளது! ரகசிய வாக்கெடுப்பிற்கு பெரும் முயற்சி செய்து கொண்டு இருகின்ற  MAP.தாஜ்  அவர்களை பற்றி மிகவும் கீழ்த்தனமாக சென்ற வாரம் நீடூர் நெய்வாசல் பெரிய கடைதெருவில் விமர்சனம் செய்து நோட்டீஸ் ஒட்ட பட்டிருந்தது!இரண்டு தினங்களுக்கு முன்பு தாஜ் அவர்களின் தகப்பனார் முன்னாள் முத்தவல்லி,சிறிய தகப்பனார் அவர்களை பற்றியும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு நோட்டிஸ் கடைதெருவில் ஒட்டி வைக்க பட்டிருந்தது. இதெல்லாம் தாஜ் அவர்களை அவமான படுத்துவதற்காகவும் அவரின் மன உறுதியை குலைப்பதற்காகவும் ஆத்திரமூட்டி பிரச்சனையை கிளப்ப, தேர்தலை சீர்குலைக்க ஆதிக்க சக்திகள் சதி செய்தனர், இருந்தும் தாஜ் அவர்களும் அவர் அணியினரும் மிகவும் அமைதிக்காத்தனர்.அப்படி இருந்தும் தாஜ் அவர்களின் மீது குழப்பம் விளைவிப்பதாகவும் அவதூறு பேசுவதாகவும் பொய்யான புகார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஆதிக்கசக்திகளால் கொடுக்க பட்டுள்ளது!!உண்மை நிலவரம் ஜமாத்தார்களுக்கு தெரியும். சட்டப்படி இந்த பொய் புகாரை எதிர் கொள்வார். அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தார்களின் ஆதரவைக்கொண்டு சட்டப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்வார்.தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி வெற்றிபெறாது!!அல்லாஹ் உண்மையானவர்களுக்கே வெற்றியை தருவான்!!ஆமீன்!!!(முன்பு இதுபோல் ஒரு  புகார் தாஜ் அவர்களின்மேல் கொடுத்து அமைதி பேச்சிவார்தைக்கு  அழைத்தார்கள்....அதுபோல் தற்போது அமைதி பேச்சிவார்த்தை என்ற பெயரில் தேர்தலை தடுக்க முயற்சியா? அல்லாஹ் அறிவான்!!! அமைதியான முறையில் தேர்தல் நடக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்!! ஆமீன்.

யார் காரணம்?


                                                                        
நமதூரில் 16.06.2012 அன்று ஊர் நிர்வாக தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய இருகின்றார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பொய்யான பல செய்திகளை ஜமாத்தார்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார்கள். ஆனால் அந்த முயற்சி பலன் தர போவதில்லை. நஜாத்து காரர்கள் நிர்வாகத்தை கைபற்ற முயற்சி செய்வதாக செய்தி பரப்புகின்றார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், இது ஊர் ஜமாத்து நிர்வாகிகளின் தேர்வு. இதில் தவ்ஹித் ஜமாஅத் என்றோ, .மு.மு. என்றோ அல்லது எந்த அரசியல் கட்சிக்கோ இந்த தேர்தலில் என்ன வேலை இருக்கிறது? தவ்ஹித் ஜமாத்தினர் யாரும் போட்டியிடவும் இல்லை, மாறாக .மு.மு.கவினர் சிலர் போட்டியிடுகின்றனர்

இந்த தேர்தலை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக யாரும் பார்க்க போவதில்லை. போட்டியிடும் வேட்பாளர் நல்லவரா?அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவரா? நல்ல நிர்வாகியாக இருப்பாரா?என்று மட்டும் தான் பார்பார்கள். இந்த ரகசிய வாக்கெடுப்பிற்கு ஆரம்பம் தொட்டே எல்லோரும் கலந்தே தான் முயற்சி செய்தனர். முக்கியமாக .மு.மு.கவினர் தான் அதிகம் ஆலோசனைகள் தந்தனர். .மு.மு. தலைமையிலும் நல்ல ஆலோசனைகள் வழங்க பட்டன. .மு.மு. தலைமைக்கு அழைத்து சென்றது நமதூர் .மு.மு.கவினர் தானே!!. கிளை தலைவர் தானே!!. அப்போது ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்திவிட்டு இப்போது வேண்டாம் என்பதின் மர்மம் என்ன? ஜனநாயக முறையில் செயல் படும் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ஒற்றுமையை தான் வலியுறுத்துகின்றன.  சமுதாயத்திற்காக பாடுபடும் எல்லா அமைப்பினரும் அநியாயத்திற்கு துணை நிற்க மாட்டார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்றால் எட்டிக்காயாக கசப்பதேன். எதோ அதிசயமாக நமதூரில் தான் நடக்க இருப்பது போல் பதருவதேன்? மூன்று வருடத்திற்கு முன்பாகவே கூத்தாநல்லூர்,பூதமங்களம்,அடியக்கமங்கலம்,போன்ற ஊர்களிலும் சமீபத்தில் மேலக்காவேரியிலும் இன்னும் பல ஊர்களிலும் நடந்துள்ளது

இப்போது இப்படி பதருபவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு கையெழுத்து முறையில் வாக்கெடுப்பை நடத்தினார்களே!! அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே!!..அப்போது நடந்த தேர்தலில் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் ஏற்றுகொண்டிருப்பர்கள்….முடிவு தோல்வியாக இருந்த காரணத்தினால் அந்த முறையே வேண்டாம் என்கின்றனர். அப்போதே  வெற்றி பெற்ற அலி அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தால் இன்று இந்த அளவுக்கு பிரச்சனை பெரிதாக போயிருக்காது. அந்த வெற்றியை அங்கிகரிகாததிற்கு யார் காரணம்? வக்பு போர்டிலிருந்து இருவர் வந்து ஜமாத்தினர் 200 பேர்களுக்கு மேல் திரண்டு வாக்களித்து அலி அவர்களின் வெற்றியை அறிவித்த பிறகு ஏற்றுகொள்ள முடியாது என்று பிடிவாதம் பிடித்தது யார்?. திரண்டு வந்து ஒட்டு போட்ட ஜமாத்தினரை இழிவுப்படித்திய செயல் அல்லவா?அப்படி நடந்த தேர்தலையே ஏற்று கொள்ளாதவர்கள் கோரஸ் முறையில் மட்டும் சத்தத்தை வைத்து எப்படி வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வார்கள்? கோரஸ் முறை என்பது ஆதிக்க சக்திகள் முன்பே நிச்சயம் செய்தவர்களை முன்மொழிவார்கள். அதை ஆதரித்தால் வெற்றி அங்கிகரிக்கபடும், இல்லையேல் ஒத்திவைக்கப்படும். மீண்டும் சில வாரங்களில் கூடி சில மாற்றங்களோடு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டதாக அவர்களாகவே அறிவித்து விட்டு வீடு வீடாக சென்று நிர்வாகிகள் தேர்வாகி இருப்பதாக ஒப்புதல் கையெழுத்தை வாங்கி வக்பு போர்டிற்கு அனுப்பி விடுவார்கள். ஜமாத்தார்களே நாம் கேட்பது ஜமாத்து நிர்வாகிகள் தேர்வை நான்கு பேர் நிச்சயிக்ககூடாது!!. ஜமாத்தார்கள் தான் நிச்சயிக்கணும்!!.பகிரங்கமாக கருத்து தெரிவித்தால் மன கசப்பு வரும் என்பதால் தான் ரகசியமாக எந்த முறை வேண்டுமானாலும் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றால்…… முடியாது என்கின்றனர் ஆதிக்க சக்திகள்ஆகையால் தான் இவர்களிடம் பேசி பலன் இல்லாததால் தான் உயர்நீதிமன்றம் மூலம் ரகசிய வாக்குபதிவிற்கு ஏற்பாட்டை செய்தனர் நமதூர் ஜமாத்தினர்.இந்த ஏற்பாட்டை நமது ஜமாத்தினர் தான் செய்தார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுகிறார்கள்.

இப்போது எல்லா ஏற்பாடுகளும் முடிந்து தேர்தல்நாள் நெருங்கும் தருவாயில் இரண்டு தரப்பில் இருந்தும் கலந்து சுமூகமாக முடிக்கலாம் என்று சிலரால் யோசனை சொல்லப்படுகின்றது.இது காலம் கடந்த யோசனை! பதவி காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாக அத்துமீறி பதவியை கையில் வைத்திருந்தார்களே முன்னால் நிர்வாகிகள்,அப்போது ஏன் இதுபோல் ஒரு யோசனையை முன்வைக்கவில்லை.பதவிகாலம் முடிந்தும் எந்த அடிப்படையில் தொடர்ந்தார்கள். இவர்களின் பதவிகாலம் முடிந்த உடனேயே ஊர் பெரியவர்களை கூட்டி இடைக்கால நிர்வாகத்தை அமைத்திருக்க வேண்டியது தானே.இப்போதும் நீதி மன்றம் செல்லாதிருந்தால் பழைய நிர்வாகமே தொடர்ந்து இருந்திருக்கும்.மாற்றம் வேண்டும் என்று சொல்லி போட்டியிடும் வேட்பாளர்களையே மிரட்டுபவர்கள் கோரஸ் முறை வாக்கெடுப்பில் ஜமாத்தார்களின் தனிப்பட்ட கருத்திற்கு எப்படி மதிப்பளிப்பார்கள்?மாறாக தாக்குதலில் ஈடுபடுவார்கள்.அப்படி முன்பு தாக்குதல் சம்பவமும் நடந்துள்ளது.ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கின்றீர்கள்?ரகசிய வாக்கெடுப்பு என்றால் ஜமாத்தினர் தமது விருப்பத்திற்கு சுதந்திரமாக நல்லவர்கள்  யாரையும் கொண்டுவரட்டுமே!இந்த தேர்தல் முறையை வேண்டாம் என்றால் தங்களின் நிலைபாட்டை ஜமாத்தினரிடையே பிரச்சாரம்  செய்யுங்கள்! தீர்ப்பை ஜமாத்தினர் தருவார்கள்.அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.எந்த ஊரிலும் இப்படி தேர்தல் இல்லை.நம்மூரில் வந்தால் சுத்து வட்டாரத்திலும் வந்துவிடும் என்கின்றனர்.எந்த ஊரில் ஊர் நிர்வாகிகளே ரௌடிகலாக கோதாவில் இறங்கி உள்ளனர்?எந்த ஊரில் பள்ளிவாசல் சொந்தமான கட்டிடங்களை ஆக்ரமிப்பு செய்துள்ளனர்?ஒருவர் அதில் அரசியல் கட்சி அலுவலகமும் அமைத்துள்ளார். ஊர் நிர்வாகம் என்ற பெயரில் அராஜகம் எந்த ஊரில் நடகின்றது?நியமனம் என்றால்,மார்க்க அறிவில்லாத பொது அறிவில்லாத ஆதிக்க சக்திகளுக்கு தலையாட்டி கொண்டிருப்பார்கள். இதை நமதூர் ஜமாத்தினர் நிறையவே அனுபவித்துவிட்டனர்.இனி முடிவு  ஜமாத்தினர் கையில்!!.

ஆகவே ஜமாத்தார்களே!!நல்லவர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்யுங்கள்!!.தலையாட்டி பொம்மைகளை புறக்கணியுங்கள்!!ஊழல் பேர்வழிகளை புறக்கணியுங்கள்!!அரசியல் மற்றும் எந்த அமைப்பை சார்ந்தவரையும் நிர்வாகத்திற்கு வர அனுமதிக்காதீர்கள்!அல்லாஹ்விற்கு பயந்து நடப்பவர்களை உலக  நடப்பு தெரிந்தவர்களை,நல்ல ஒழுக்கம் உள்ளவர்களை,சுயமாக சிந்தித்து செயல்பட கூடியவர்களை தேர்வு செய்யுங்கள்!!வாக்களர் பட்டியலில் பலபெயர்கள் விடுபட்டுள்ளதாக அறிகின்றோம்.இதற்கு யார் காரணம்? வாக்களர் அடையாள அட்டை இருக்கும் நம் ஜமாத்தை சேர்ந்தவராகவும் இருப்பார்.ஆனால் வாக்காளர் லிஸ்டில் பெயர் விடுபட்டிருக்கும் ஆகையால் தான் ஒரு மாதத்திற்கு முன்பே வக்பு போர்டு அதிகாரிகள் வாக்காளர் வரைவு பட்டியலை ஊர் பள்ளி நோட்டிஸ் போர்டில்  வைத்து சென்றார்கள்.பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்க விண்ணப்பபடிவமும் கொடுத்துசென்றனர்.ஆனால் தற்போதிய நிர்வாகிகள் அதை முறையாக ஜமாத்தினரிடம் கொண்டு செல்லவில்லை, மாறாக  இருட்டடிப்பே செய்தனர்.அதே சமயம் ரகசியவாக்கெடுப்பை வலியுருத்தியோர் ஊரில் மூன்று இடங்களில் மாதிரி வாக்காளர் பட்டியலை வைத்தனர்.விடுபட்டவர்களை சேர்த்தனர்.இந்த பட்டியலை கடையில் பார்வைக்கு  வைத்திருந்த O.H.R. அன்சாரி  என்பவரை இடைகால நிர்வாகிகள் மிரட்டினர்.இவர்களும் விடுபட்டவர்களை சேர்க்க முயலவில்லை.அதற்காக முயற்சி செய்தவர்களையும்  மிரட்டினார்கள்.ஆனால் தற்போது பட்டியலில் பல பெயர் விடுபட்டுள்ளது. அதனால் புதிதாக, விடுபட்டுள்ள பலரையும் சேர்த்து புதிய பட்டியல் தயாரித்து பிறகு தேர்தல் நடத்தலாம் என்று யோசனை முன்வைகபட்டுள்ளதாகவும் அதே போல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று யோசனை முன் வைக்க பட்டதாகவும்,அதற்கு வக்பு போர்டு அதிகாரிகள் வாக்களர் சேர்க்கைக்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும்,ஜமாத்  நிவாகிகள் தேர்தலில்  பெண்கள் வாக்களிப்பது  நடைமுறையில் இல்லை என்று வக்பு போர்டிலிருந்து பதில் தெரிவிக்கபட்டுள்ளதுஇதை ஒரு காரணமாக வைத்து தேர்தலை தடுக்க முயற்சிப்பதாகவும் அறிகிறோம்

நல்ல காரியத்தை யாராலும் தடுக்க முடியாது.அல்லாஹ்வின் உதவியால் ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பால் உலகெங்கும் வசிக்கும் நமதூர் சகோதரர்களின் துவாவினாலும் ரகசிய வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெறும்!!.இந்த ரகசிய வாக்கெடுப்பினை ஜமாத்தினர் எதிர்கவில்லை.ஆதிக்க சக்திகள் எதிர்கின்றனர்!! கட்டபஞ்சாயத்து  செய்வோர் எதிர்கின்றனர்!!நிர்வாகத்தை கையில் வைத்துகொண்டு ஆதாயம் தேடியவர்கள் ,தேட நினைபவர்கள் எதிர்கின்றனர்!!பள்ளிவாசல் கடைகளை ஆக்கிரமித்து வைத்திருப்போர் எதிர்கின்றனர்!!ஜமாத்தினர் நல்ல நிர்வாகம் வரவேண்டும் என்று தான்  நினைகின்றனர்!!இவ்வளவு பிரச்சனைகளையும் ஆதிக்க சக்திகளால் முன்னிறுத்த பட்டுள்ள வேட்பாளர்களுக்கு தெரியாமல் இல்லை.....தெரியும்!!!!!இருந்தாலும்,"நமக்கேன் வம்பு"என்று இருக்கிறார்கள்."நம் சொத்தா?"அல்லது "நமக்கா பிரச்சனை?"என்று இருக்கின்றார்கள்...ஆம் உங்களுக்கு பிரச்சனை இல்லைதான்!!ஆனால் நீங்கள் பழைய கணக்கை கேட்டால்,நியாயத்தை பேசினால் பிரச்சனை உங்களுக்கும் வந்துவிடும்!!ஆதிக்க சக்திகளை மீறி உங்களால் செயல்பட முடியாது!!செயல் பட்டால்...உங்களுக்கும் பிரச்சனைகள் வரும்!! வெற்றி பெற்றால் அல்லாஹ்விற்கு பயந்து நியாமாக நடப்பேன் என்றால் ஜமாத்தார்கள் வெற்றிபெற செய்வார்கள்...தேர்தல் வரைதான் வேட்பாளர்...தேர்தல் முடிந்த பிறகு நிர்வாகிகள் இரண்டு  தரப்பிலும் கலந்து வரும் சூழ்நிலை இருக்கிறது...ஆகையால் பரஸ்பரம் தனிநபர் விமர்சனம் செய்யாமல்,வெற்றிபெற்றால் என்ன நல்ல காரியம் செய்ய முடியும் என்று கூறி ஆதரவை கேட்பது நல்லது!!இதை முதலிலேயே கலந்து போட்டு சுமூகமாக நடத்தி இருக்கலாமே என்றால்....கலந்து நியமனம் செய்வது யார்...அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுப்பது? ஆகையால் ஜமாத்தார்கள் கையில் தேர்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பது தான் ரகசிய வாக்கெடுப்பு முறை! பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அவசியம் வாக்களிக்க வேண்டும்....மாற்றத்தை கொண்டு வரவேண்டும்...!!!ஆண்டவன் அருள்புரிவான்...!!!!ஆமீன்!!!